2025 மே 08, வியாழக்கிழமை

14 வயது சிறுவன் மீது 20 வயது இளைஞன் கத்திகுத்து தாக்குதல்

Freelancer   / 2022 ஒக்டோபர் 08 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடி - கர்ப்பலா பிரதேசத்தில் வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது, 20 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவ தினமான நேற்று மாலை சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். இதன் போது வீதியில் நின்ற இளைஞன், சிறுவனைப் பார்த்து “என்னடா என்னை பார்க்கின்றாய்” என கேட்டுக் கொண்டு சிறுவன் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டார்.

இதனையடுத்து சிறுவன் கத்தியதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததுடன், கத்திகுத்து தாக்குதலை நடத்திய இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்ததுடன்,  இவர் போதைப்பொருள் பாவிப்பதாகவும் இதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (R) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X