Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 04 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்
"அடுத்த வருடம் டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2,500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன்" என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 75ஆவது மாதிரிக் கிராமமான 'முல்லை நகர்' வீடமைப்புத் திட்ட திறப்பு விழா, இன்று (04) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “தங்களது வீட்டுத் திட்டம் திறக்கப்பட்டது போன்று இலங்கை பூராகவும் இன்னும் 753 மாதிரிக் கிராமங்கள் திறப்பு விழா காண உள்ளன. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2,500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு இந்த வருடத்துக்குள் இன்னும் 100 மாதிரிக் கிராமங்கள் அமைக்கும் வாய்ப்பை, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளருக்கு வழங்குவேன்.
அத்தோடு 2019ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக மட்டக்களப்பு மாவட்டத்தில், 200 மாதிரிக் கிராமங்கள் அமைக்கும் வாய்ப்பை வழங்குவேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக காணப்படுவதை நான் அறிவேன்.
நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டுப் பிரச்சனைகளை எவ்வகையிலாவது தீர்த்து வைப்பேன் என்ற வாக்குறுதியை வழங்குகின்றேன்.
அரசியல்வாதிகள் வந்து பொய்யான வார்த்தைகளை கூறி உங்களை ஏமாற்றுகின்றார்கள் என்று எனக்கு தெரியும். எனது காலஞ்சென்ற தந்தையாரின் மீது கூறுகின்றேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சனைகளுக்கான சகல விதமான தீர்வுகளையும் பெற்றுத் தருவேன் என வாக்குறுதியளிக்கின்றேன்." எனக் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
31 minute ago