2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

1996ஆம் ஆண்டு வான் கடத்தல்: மேலும் அறுவர் கைது

Gavitha   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


18 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளினால் மட்டக்களப்பு, சித்தாண்டிப் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்ட ஹையேஸ் வானுடைய தொடர்புடைய மேலும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயந்த பிறேமதிலக்க தெரிவித்தார்.

கடந்த நான்கு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது  கொழும்பு, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, தொட்டலங்க, கடவத்த மற்றும் கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய பகுதிகளில் இருந்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஐந்து பேரும் தமிழரொருவருமாக மொத்தம் ஆறு பேர் செவ்வாய்க்கிழமை (14) கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் ஏறாவூருக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

1996.08.11ஆம் திகதியன்று, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டிச் சந்தியில் வைத்து, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த வான் தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்தப்பட்டதாக ஏறாவூர் பொலிஸில் முறையிடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக, கடந்த 2014.08.17 அன்று இருவர் கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சந்தேக நபர்கள் இருவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட மேலும் நால்வர் தலைமறைவாகியிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X