2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

2 கரடிக்குட்டிகள் மீட்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


வாகரைப் பிரதேச மதுரங்குள காட்டுப் பகுதியில், குளி ஒன்றில் தவறி விழுந்த 6 மாதங்கள் நிரம்பிய 2 கரடிக் குட்டிகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (01) மீட்டெடுத்துள்ளதாக, மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டார அதிகாரி கே.ஜே.எஸ்.ஜனா சாந்தகுமார் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு மீட்கப்பட்ட கரடிக் குட்டிகளும் தாயும் காட்டில் உள்ள மலைக் குன்றில் நடமாடியபோது குளிக்குள் தவறி விழுந்துள்ளது.

ஓரிரு நாட்களாக குளியை விட்டு மேலே வருவதற்கு தாய் கரடி முயன்ற போதிலும் பலனின்றி தாய் கரடி இறந்துள்ளது.

இதேவேளை பிரதேச மக்கள் தமக்கு வழங்கிய தகவலையடுத்து வன வள பாதுகாப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இவை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்கள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X