2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

200 வருடம் பழமை வாய்ந்த மரமொன்றில் தீ பரவல்

Freelancer   / 2022 ஜூலை 13 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு காத்தான்குடியில் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த மரமொன்றில் நேற்று மாலை  தீ பரவியதால் மரம் முற்றாக எரிந்துள்ளது.

காத்தான்குடி 6 ஆம் குறிச்சி அப்துல் ஜவாத் அலீம் வீதியிலுள்ள காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயல் மைய்ய வாடியிலேயே இந்த மரம் நின்றுள்ளது.

குறித்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்ட நிலையில், நின்ற இம்மரத்தின் மீது தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை பொதுமக்கள் அணைத்துள்ளனர்.எனினும் மரம் முற்றாக எரிந்துள்ளது

இதே போன்று இந்த மைய வாடியின் மற்ற பகுதியிலும் இன்னுமொரு மரத்திலும் தீ பரவல் ஏற்பட்டு அந்த மரமும் எரிந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X