Menaka Mookandi / 2011 மார்ச் 23 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ள புலிகள் அமைப்பினது 42 முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கென மத்திய வங்கியின் அனுசரணையுடன் இன்று 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை நிதி உதவி பகிர்ந்தளக்கப்பட்டது.
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிதி உதவிகளை வழங்கினார்.
மட்டக்களப்பு, சத்துரகொண்டான் சர்வோதய நிலையத்தில் இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எம்.அலிமுஹமட் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மத்திய வங்கி உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .