2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளின் பெயர்களுக்கு முன்னால் கல்வி வலயத்தின் பெயரை குறிப்பிட உத்தரவு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

பாடசாலைகளை இலகுவில் அடையாளம் காண்பதற்காக வலயக் கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகள் தத்தமது வலயக் கல்வி அலுவலகங்களின் பெயரை சுருக்கமாக பாடசாலைப் பெயர்களுக்கு முன் உபயோகிக்க வேண்டுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் தங்களது நிர்வாகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அறிவிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பணித்துள்ளார்.

முன்னர் மாவட்டத்தின் பெயரை அடையாளப்படுத்தி பாடசாலையின் பெயர் கூறப்பட்டது. தற்போது அதற்குப் பிறகு வலயத்தின் பெயரை சுருக்கமாக அடையாளப்படுத்தி அதன் பின் பாடசாசாலையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மத்தி மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .