A.P.Mathan / 2011 ஏப்ரல் 13 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் மணல் ஏற்றி வந்த ஒருவரிடம் இலஞ்சம் தருமாறு குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கேட்டதற்கமையவே மேற்ப பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து மணல் ஏற்றி வந்த நபர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் பணம் வழங்குவதற்கு நேர அவகாசம் கேட்டுள்ளார்.
பின்னர் இந்நபர் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையுடன் மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு அருகாமையில் வைத்து குறிப்பிட்ட இப்பொலிஸ் உத்தியோகத்தருக்கு மணல் ஏற்றி வந்த இந்நபர் இலஞ்சப் பணத்தை வழங்கும்போது ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை மடக்கிப்பிடித்துள்ளனர்.
இதையடுத்து குறிப்பிட்ட பொலிஸாரின் வேலையை இல்லாமல் செய்து இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்ததாக மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago