2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கலாசார மத்திய நிலையம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 14 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற கலை, கலாசார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கலாசார மத்திய நிலையம் தாபிப்பது சார்பாக விடுத்த வேண்டுகோளுக்கமைய கலை, கலாசார அலுவல்கள் அமைச்சர் ரி.எம்.ஏக்கநாயக்க மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று விரைவாக கலாசார மத்திய நிலையங்களை நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாபிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார்.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் மேலதிக கோரிக்கையான பரதநாட்டிய பயிற்சி, மங்கல மேளப் பயிற்சி உட்பட்ட பயிற்சி நெறிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்துவதற்கும் ஒழுங்கு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் கலை, கலாசார ஆலோசனை குழுவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மாத்திரமே பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .