Super User / 2011 ஏப்ரல் 15 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான கண்ணன் என அழைக்கப்படும் பாக்கியராஜா சற்று முன்னர் ஆயுதமேந்திய குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
செட்டிப்பாளையத்திலுள்ள அவரின் இல்லத்திற்கு 10 பேருக்கும் அதிகமானோரைக் கொண்ட குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த பாக்கியராஜா தற்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சம்பவம் நடந்த இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு அச்சபையின் தவிசாளராக பாக்கியராஜா முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago