Super User / 2011 ஏப்ரல் 17 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா, ஜதுசன்)
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான சீனித்தம்பி பாக்கியராசா (கண்ணன்) தாக்கப்பட்டமை தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
இதேவேளை, 36 வயதான பாக்கியராசா களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இத்தாக்குதல் தொடர்பில் அவர் கூறுகையில், 'நான் எனது வீட்டில் நின்றபோதுதான் இச்சம்பவம் நடந்தது. இதன் பின்னணி என்ன என்று எனக்கு இதுவரை தெரியாது. இது தொடர்பில் எனக்குத் தெரிந்தது என்னைத் தாக்க வந்தவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றின் இலக்கம் மட்டுமே.
அதனை களுவாஞ்சிகுடி பொலிசாரிடம் கொடுத்துள்ளேன் அதனை வைத்துக்கொண்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான குழு சந்தேகத்தின் பெயரில் இரு நபர்களைக் கைது செய்துள்ளது.
மேலதிக விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நான் ஓர் சமூக சேவையான். இச்சேவைகளை குழப்பவேண்டும் என்ற எண்ணத்துடன் அதனை சகித்துக்கொள்ளமுடியாத தீய சக்திகள்தான் இதனை மேற்கொண்டிருக்க வேண்டும்' என்றார்.
(படம் : ஜவீந்திரா)
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago