2026 மே 09, சனிக்கிழமை

ஆரையம்பதி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 மார்ச் 02 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் இராணுவ வீரர் ஒருவர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஆயுதமுனையில் தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டன. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் ஒருவரும் காத்தான்குடியைச் சேர்ந்த  இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்கநகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றும் இருவர் பொலிஸாரினால் தேடப்பட்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய  பொலிஸ் அதிகாரி எம்.பி.எம்.தாகாவின் தலைமையில் விசாரணை செய்து வந்த பொலிஸ் குழுவினர், இச்சந்தேக நபர்களை கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .