2026 மே 06, புதன்கிழமை

படுவான்கரையில் நெற்களஞ்சிய வசதியின்மையால் குறைந்த விலைக்கு நெல் விற்பனை

Kogilavani   / 2012 மார்ச் 15 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜவீந்திரா) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் வேளாண்மை செய்யப்படும் படுவான் கரைப்பகுயில் நெல் கொள்வனவு செய்வதற்குரிய போதிய களஞ்சிய வசதியின்மையினால் அதிகளவான நெல்லினை குறைந்த விலைக்கு விற்பனை செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தாம் தள்ளப் பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரையினை மையப்படுத்தி ஒரு நெற்கழஞ்சிய சாலையே இயங்கி வருகின்றது.
சிறுபோகம் பெரும்போகம் என இருபோகங்களுக்கு நெற்செய்கை மேற்கொள்கின்ற போதிலும் நெற்களஞ்சிய வசதியின்மையால், நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்க முடியாமல் ஏனைய பிரதேசங்களிலிருந்து வரும் தரகர்களுக்கு குறைந்த விலைக்கு நெல் விற்பனை செய்யப்படுவதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .