2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2012 மே 31 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திலுள்ள தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.

வித்தியாலயத்தின் அதிபர் தர்மதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சபா சக்கரவர்த்தி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தா.உதயஜீதவாஸ், கோட்டக் கல்வி அதிகாரி குணலிங்கம், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தங்கராசா உற்பட் பல அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.

பாடசாலையின் கட்டிடத் திறப்பு விழா, பாடசாலையின் பொன் விழா மற்றும் 'கலைச்சிமிழ்' என்னும் சஞ்சிகை வெளியீடு என முப்பெரும் நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .