2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

துறைநீலாவணையில் குடிநீர் விநியோகப் பிரச்சினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஜூன் 02 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                       
(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணைக்கு குடிநீர் வினியோகம் முறையாக  மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி பொதுமக்கள் இன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இக் குடிநீர் வினியோகம் சீரில்லா நிலை ஏற்பட்டது. இது தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரிடம் இது குறித்து பொதுமக்கள் முறையிட்டும் பலன் ஏற்படவில்லை.

இப்பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் அம்பாறை மாவட்ட நீர்வழங்கல் அதிகாரசபையின் பொறியியலாளர் பெரியநீலாவணையிலுள்ள ஆரம்பத்தில் நீர் வழங்கி தற்போது தூர்ந்து போன நிலையில் உள்ள கிணற்றில் இருந்து வினியோகம் செய்ய முற்பட்ட போது அதனைப் பொது மக்கள் இன்று காலை தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் பொது மக்களுக்கும் பொறியியலாளருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து நீர்வினியோகத்தைத் துண்டிக்கப்போவதாக தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வேளை நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவின் வேண்டுகோளுக்கு அமையவே தான் இந்த வினியோகத்தை செய்ய முற்பட்டதாக பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொன் செல்வராசாவிடம் கேட்டபோது, 'துறைநீலாவணை நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினையுள்ள கிராமமாகும். கடந்த காலங்களில் இப்பிரச்சினையை எந்த அரசியல்வாதியும் அலட்டிக் கொள்ளாத நிலையில், பவுசர் மூலம் குடிநீர் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டேன்.

ஆனால் தொடர்ந்து பவுசர் மூலம் நீர் வழங்குவது சாத்தியமற்றது எனவும் பெரிய நீலாவணையிலுள்ள கிணறு மூலம் நீர் வழங்க முடியும் எனவும் பொறியியலாளர் தெரிவித்தார். இந்த நிலையில், துறைநீலாவணையில் உள்ள ஆலயம் ஒன்று இந்தக்கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகத்தை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பில் பொறியியலாளரைத் தொடர்பு கொண்டு, பெரிய நிலாவணையில் உள்ள கிணற்றில் இருந்து நீர் வழங்குவதாக இருந்தால் துறைநீலாவணையிலுள்ள பொது மக்கள் கிராம அபிவிருத்திச் சங்கம், ஆகியவற்றில் கலந்தாலோசித்து அனுமதி பெற்று அதை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தேன்' எனத் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .