2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மியான்குள அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு

Super User   / 2012 ஜூன் 02 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித், ஸரீபா, ஆர்.அனுருத்தன்)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் 45.6மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம்; புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள வாகரை பிரதேசத்திற்கு உட்பட்ட   மியான் குளம் அபிவிருத்தி; வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை  காரைமுனைப்பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் , கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் பசீர் சேகுதாவுத், கிழக்கு மாகாண அமைச்சர்களான  எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.சுபைர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்ட சகல உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .