2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு போன்று காட்சியளிக்கின்றது: பப்புவா நியூகினியா அமைச்சர்

Super User   / 2012 ஜூன் 02 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     
    (எம்.சுக்ரி)


இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு போன்று காட்சியளிக்கின்றது பார்ப்பதற்கு இலங்கை மிகலும் அழகாக இருக்கின்றது என பப்புவா நியூகினியா நாட்டின் முன்னாள் பிரதமரும் தற்போதய  அரச கூட்டுத்தாபன்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான  மெக்கேரா மொராட்டா தெரிவித்தார்.

நேற்று  மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்ற காத்தான்குடியிலுள்ள கரையோர பாலர் பாடசாலைகளுக்கு தளர்பாடங்களை வழங்கி வைககும் வைபவத்தில் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய் பப்புவா நியூ கினியா நாட்டின் அரச கூட்டுத்தாபன்ஙகள் பொருனாதார அபிவிருத்தி அமைச்சர் மெக்கேரா மொராட்டா எனது நாடும் இலங்கையையும் தீவுகளாகும்.

இலங்கையைவிட எனது பப்புவா நியூகினியா நாடு 7 மடங்கு பெரியது. ஆனால், இலங்கையைவிட சனத்தொகையில் எனது நாடு மூன்று மடங்கு குறைவானதாகும்.

எனது நாட்டில் தேயிலை, எண்ணைய்வளம், தங்கம், செம்பு, தாணிய வகைகள், போன்ற இயற்கை வளங்கள் கொண்ட ஒரு நாடாகும்.

அதே போன்று இலங்கையும் செழிப்பான தாணிய வகைகள் கொண்ட வளமிக்க ஒரு நாடாகும்.
சர்வதேச ரீதியாக  இலங்கை கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது நான் இலங்கைக்கே ஆதரவு வழங்குவேன். ஆனால் எனது மனைவி அவுஸ்திரேலியா விளையாடினால் அதற்கே ஆதரவு வழங்குவார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அவர்களின் விளையாட்டு எனக்கு நன்கு பிடிக்கும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் பிரதியமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்எம்.பரீட், பப்புவா நிவ் கினி நாட்டின் அமைச்சரின் பாரியார் திருமதி ரோஸ்லின் மொராட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .