2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

காரமுனை மீராமுஹைதீன் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 03 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீள்குடியேற்றக் கிராமமான காரமுனையில் மீராமுஹைதீன் பள்ளிவாசலுக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் அழைப்பின்  பேரில் வருகை தந்த டுபாய் நாட்டைச் சேர்ந்த ஸயிட் அல் யமாஹ் என்பவரின் 25 இலட்சம் ரூபா நிதி உதவியில் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படவுள்ளது.  

இதற்கான நிகழ்வில் தேசிய கைத்தொழில் அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .