2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் 'புர நெகும' வேலைத்திட்டம் ஆரம்பம்

Super User   / 2012 ஜூன் 03 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதேசங்களுக்கு இடையிலான கிராமிய சிறு நகர அபிவிருத்தி திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 'புர நெகும'  வேலைத்திட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் அறபா நகர் அமீர் அலி வீதி 9,856,378 ரூபா பெறுமதியில் ஒரு கிலோ மீற்றர் கொங்ரிட் வீதியாக அமைய பெறவுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .