2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பொண்டுகள்சேனை பாலத்தினை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பார்வையிட்டார்

A.P.Mathan   / 2012 ஜூன் 04 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா - மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பாலத்தினை பார்வையிட்டு, அதன் நிர்மாண வேலைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மிகவும் பின்தங்கிய பிரதேசமான பொண்டுகள்சேனைப் பிரதேசப் போக்குவரத்துக்கு வெள்ளகாலங்களில் மிகவும் முக்கியமாக விளங்கும் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாலத்தினை திருத்த உதவுமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்தவேண்டுகோளின்பேரில் இப்பாலம் திருத்திமைக்கப்பட்டுவருகின்றது.

அத்துடன் குறித்த பாலத்தின் ஊடாக உள்ள வீதியை புனரமைப்பதற்கும் எதிர்காலத்தில் உதவிகள் வழங்கப்படும் என நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உறுதியளித்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .