2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பட்டதாரிகள் ஒன்றியம் கிழக்கு முதலமைச்சரை சந்திப்பு

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2400ற்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் பெரும்பாலானர்வர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்குவது என்பதில் சந்தேகம் தமக்கு இருப்பதாகவும் அவ்வாறு நியமனம் வழங்கும் போது ஆண்டை அடிப்படையாக வைத்து நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது பட்டதாரிகள் ஒன்றியம் முதலமைச்சரிடம் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சந்திரகாந்தன்,

குறித்த நியமனங்கள் வேண்டுகோளுக்கமைய செயற்படும் வண்ணம் இடம்பெறும். குறிப்பாக ஆண்டை அடிப்படையாக கொண்டுதான் நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் ஒன்றியத்துடன் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கலந்துரையாட இருப்பதாக தெரிவித்தார்.

பட்டதாரிகள் ஒன்றியம் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் வை.பிரதீபன், ஒன்றியத்தின் செயலாளர் மகேந்திரன், இணைப்பாளர் திவாகரன் மற்றும் பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .