2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கித்துள் - உறுகாமம் குளங்களை இணைக்கும் திட்டம்; நீர்ப்பாசன அமைச்சர் நேரடி

Menaka Mookandi   / 2012 ஜூன் 05 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

கித்துள் மற்றும் உறுகாமம் ஆகிய இரு குளங்களையும் இணைக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான கித்துள் குளத்திற்கு நேற்று மாலை திங்கட்கிழமை மாலை நேரடியாக விஜயம் செய்த நீர்ப்பாசன மற்றும்நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபல டி சில்வா பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.மோகனராஜா மற்றும் பொறியியலாளர்கள், பொது மக்களுடன் கலந்துரையாடினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நிர்ப்பாசனத்துறை அமைச்சர், இதுதொடர்பான ஆய்வுகளையும், புவியியல் துறையினருடன் கலந்துரையாடி இதன் அமைவிடம் ஏற்படும் பிரச்சினைகள், இதன் அவசியத் தன்மைகள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு நீர்ப்பாசனத்துறையினரைப் பணித்துள்ளேன். இத்திட்டத்திற்கென 2500 மில்லியக் ரூபாய் செலவிடப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய குளங்களில் இரண்டான கித்துள் மற்றும் உறுகாமம் குளங்கள் இணைக்கப்படுவதன் மூலம் சுமார் 15ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மேலதிகமாக செய்கை பண்ணக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படும் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும் அமையும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களை இணைக்கும் முயற்சியை தாம் சமல் ராஜபக்ஷ நீர்ப்பாசன அமைச்சராக இருந்தது முதல் மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக ஏற்படும் பெரும் பாதிப்புக்கள் குறைக்கப்படும்.

இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்படும் வந்தாறுமூலை, சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு எனப் பல கிராமங்கள் பாதுகாக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் நன்மையடைவார்கள் என்ற வகையில் இத்திட்டம் எம்மால் முன்வைக்கப்பட்டது அதனை அமைச்சர் பார்வையிடுவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறோம் எனவும் மிள்குடியேற்ற பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதிகமான நிலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலைமையில் மாற்றம் ஏற்படும். என்பதுடன் உற்பத்தித் துறையும் மேம்படும்.

உறுகாமம் குளத்தின் கொள்ளளவு 18,600 ஏக்கர் அடியாகும். கித்துள் குளத்தின் கொள்ளளவு 4200 ஏக்கர் அடியாகும். இரண்டும் இணைக்கப்படும் போது 95 மில்லியன் கனஅடி கொள்ளளவு உருவாகும் என நீரப்பாசன திணைக்களத்தின் உறுகம் திட்டப் பொறியியலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .