2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஆய்த்தியமலைப் பகுதியில் இருவர் நஞ்சருந்தி தற்கொலை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 06 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார், எம்.சுக்ரி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தின் ஆய்த்தியமலை முள்ளமுனைப் பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் இருவரின் சடலங்களை இன்று புதன்கிழமை காலை பொலிஸார் மீட்டனர்.   இச்சடலங்களைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து ஆய்த்தியமலை பொலிஸார் சடலங்களை மீட்டனர்.

சுமார் 50 கிலோமீற்றர் தொலைவிற்கு அப்பால் உள்ள களுவாஞ்சிக்குடி மற்றும் திக்கோடை பகுதிகளைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவரும் 32 வயதான பெண் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும்   நஞ்சுப்போத்தலும் அவர்களின்  மோட்டார் சைக்கிளும் வேளாண்மை காவல் குடிலுக்கு அருகில்  காணப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனைக்காக இச்சடலங்கள் செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .