2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பேரவையில் புதிதாக நியமிக்கப்பட்டவரை மாற்ற கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் பகிஸ்கரிப்பு

Super User   / 2012 ஜூன் 06 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

அருட தந்தை சிறிதரன் சில்வெஸ்ரரின் மறைவையடுத்து கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள உறுப்பினரை நீக்கி பாதிரியார் சமூகத்திலிருந்து ஒருவரை மீண்டும் நியமிக்க வேண்டும் என கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் வவிரிவுரை  பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.கிருஸ்ணானந் கருத்து தெரிவிக்கையில்,

"கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுகூடல் இன்று செவ்வாக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது, கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களக்கு அமைவாக அண்மையில் காலமான அருட் தந்தை சிறிதரன் சில்வெஸ்ரரின் இடத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டவரது நியமனம் உபவேந்தரின் பரிந்துரை எதுவுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது விடயமாக உப வேந்தர், மற்றும் அமைச்சு மட்டங்கள் வரையில் கலந்துரையாடினோம் ஆனால் யாரிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. அவர்கள் எல்லோரும் நழுவல் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். அதிலிருந்தே இந்த நியமனத்தில் தவறு இருக்கிறது என்பது தெரிகிறது.

மாணவர்களின் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த ஒன்றியங்களுடனும் கலந்துரையாடினோம். அனைவரும் இந்த புதிய நியமனத்தில் உடன்பாடற்றவர்களாகNவு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நியமனத்தினை இரத்து  செய்து புதிதாக ஒருவரை சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடிய வகையில் பாதிரியார் சமூகத்திலிருந்து நியமிக்கும் படி கோரியிருக்கிறோம்.

இதுவரை காலமும் எந்தவிதமான பிரச்சினைகளோ இன மற்றும் மத பேதங்களோ இன்றி செயற்பட்டு கொண்டிருக்கும் மாணவர்களிடையே பிழையான சிந்தனைகளோ பிரச்சினைகளோ முரண்பாடுகளோ ஏற்பட்டுவிடக்கூடாது என அனைத்து மாணவர்களும் விரும்புகிறார்கள்.

அதேநேரம் கிறிஸ்தவ பாதிரியார் சமூகம் பாதிக்கப்படக்கூடாது என்றும் விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில் பல்கலைகழக விரிவுரைகளை புதிதாக அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்ககும் வரையில் பகிஸ்கரிப்பது என முடிவு செய்துள்ளோம்" என்றார்.

இந்த பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களும் விரிவுரை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக பேரவைக்கு முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ள நியமனத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு உயர் கல்வியமைச்சரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அண்மையில் அகால மரணமடைந்த கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்டரின் இழப்பினை தொடர்ந்து அவரது இடத்துக்கு மட்டு.-திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையினால் அருட் தந்தை கிறைன்டன் அவுஸ்கோனின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பெயர் கவனத்தில் கொள்ளாமல் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி பதிவாளர் மும்தாஸ் என்பரினால் டாக்டர் ஜாபீரின் பெயர் அனுப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி பதிவாளர் மும்தாஸ் என்பவர் டாக்டர்  டாக்டர் ஜாபீரின் சொந்த சகோதரி என்ற தகவலும் எனக்கு கிடைத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் ஒருபோதும் இனவாதமாக பேசியதும் கிடையாது. அதற்கு ஆதரவு தெரிவித்ததும் இல்லை. எந்த வேளையிலும் முஸ்லிம் சமூகத்தினரின் மனதை புண்படுத்தும் செயற்பாடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஈடுபடமாட்டாது.

எனினும் ஒரு சிலரின் அரசியல் செல்வாக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சில பிழையான செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு உள்ளது.

இந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பிழையான நியமனத்தை இரத்து செய்ய உயர் கல்வியமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நியமனம் தொடர்பில் அரசியல் சக்திகளின் அப்பால் மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .