2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த ஏழு பேர் கைது

Kogilavani   / 2012 ஜூன் 12 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (ஸரீபா)
சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த ஏழு பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமையக ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் நிஹால் தஸாநாயக்க தெரிவித்தார்.

வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் பாவணையாளர் பிரிவில் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் இன்று அதிகாலை  மேற் கொண்ட தேடுதலின் போதே சட்ட விரோதமாக மின் பாவனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சந்தேக நபர்களை இன்று வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில்  ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .