2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ஏறாவூரில் இளம் தாயின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன், ரி.லோஹித்)

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சித்தாண்டி, பழைய சந்தை வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி மலர்மதி (19 வயது) என்ற இளந்தாயே இன்று செவ்வாய்க்கிழமை 4 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் வீட்டு வளவில் இருந்த முருங்கை மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த பெண்ணுக்கு ஒரு வயதில் கைக்குழந்தையொன்று உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .