2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

பட்டதாரிகளிடம் சந்தாபணமே அறவிடப்பட்டது: அரியநேந்திரனுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியம் பத

Super User   / 2012 ஜூன் 12 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஒன்றுகூடலின்போது ஒன்றியத்தின் விதிகளுக்கு அமைவாக அங்கத்தவர்களின் சந்தா பணமாவே 100 ரூபா பணம் அறிவிடப்பட்டது எனவும் வேறு எவரிடமும் பணம் அறவிடப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தின் கல்குடா தொகுதி செயலாளர் ரி.தயாபரன் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே தயாபரன் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தின் கல்குடா தொகுதி செயலாளர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
"09.06.2012 அன்றைய தினம் ஒன்று கூடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தினால் (கல்குடா தொகுதி) ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் அழைப்பின் பெயரில் வருகை தந்த  ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றிய அகில இலங்கை செயலாளர் மனுல சமல பெரேரா மற்றும் கல்குடா வலய ஸ்ரீ.சு.க.அமைப்பாளர் டி.எம் .சந்திரபால ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரைகள் ஆற்றினர்.

மனுல சமலபெரரா பேசுகையில் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியம் என்றால் என்ன? அதன் அசியம் என்ன?, அதனை எவ்வாறு செயற்படுத்துவதன் மூலம் நன்மைகளை பெறமுடியும் என்பதனையும் விளக்கமளித்தார். பின்னர் கிழக்கு மாகாண அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க தம்மால் இயன்ற உதவிகளை செய்வது மட்டுமல்லாமல் எமது ஒன்றிய பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வளங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். இதனை சகோதர மொழியில் இருந்து மொழிபெயர்த்தவர் எமது அமைப்பாளராவார். எமது அமைப்பளரும் அதனை உறுதிப்படுத்தினார்.

இது எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. பின்னர் அகில இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தின் விதிகளுக்கு அமைய வருடாந்த சந்தாபணமாக 100 ரூபாவை எங்கள் அமைப்பின் பட்டதாரிகளிடம் இருந்து மட்டும் பொருளாளர் பெற்றுக்கொண்டார்.

இதுவே அன்றைய நிகழ்வின் சாராம்சம், அதனைவிடுத்து எவரும் எவரிடமும் பணம் அறவிடவில்லை எனவும், எமது அமைப்பில் சேருமாறு எவரையும் எவரும் வற்புறுத்தவில்லை எனவும் அதிகாரபூர்வமாக அறியத் தருகின்றேன்.

அன்றைய செய்திக்கமைய  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனின் கூற்று முற்றிலும் தவறானது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இதுபோன்ற செய்திகளை வெளியிடும் போது சம்பந்தப்பட்ட அமைப்பையும் கருத்திற்கொண்டு அவர்கள் கருத்துகளை பெற்று உண்மைகளை கூறவேண்டும். அதனை விடுத்து சுய அரசியல் இலாபத்திற்காக கல்குடா தொகுதி பட்டதாரிகளை பகடக்காய்களாக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலும் சந்திரபால விருந்தினராக கலந்து கொண்டாரே தவிர, அவர் பணம் பெற்றார் என்ற கூற்றும் முற்றிலும் தவறு என்பதை ஆழமாக பதிவு செய்கிறோம்.

மேலும் உங்களுக்கு இன்னும் ஒரு விடயத்தை நினைவுபடுத்த ஆசைப்படுகின்றேன். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பட்டதாரிகள் சம்பந்தமான எந்த நியமனமும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலையீடு இன்றி நடைபெற்றுள்ளதா? மேலும் உங்களை இதுவரை நம்பிக்கொண்டிருந்த எங்களை போன்றோருக்கு என்ன செய்தீர்கள்? ஏதும் மாற்றுதீர்வுகள் செய்தீர்களா? என்றால் எல்லாம் கேள்விக்குறிகளே.

இதற்கான விடை காணலாகவே எமது அமைப்பின் அங்குரார்பணமும், இது போன்ற ஒன்று கூடங்களும். இதன் மூலமாவது தீர்வு பெறமுடியுமா என முயற்சிக்கும் எங்களை குட்டி குனியவைக்காமல் தட்டி கொடுத்து உயர்த்துங்கள். இதுவரை காலமும் நீங்கள் செய்ய தவறிவிட்டீர்கள். விடியலை எதிர்பார்க்கும் எங்கள் முயற்சிக்கு வழிவிடுங்கள். அதை விடுத்து எம்மை வேதனைப்படுத்தி எமது வேதனையின் உஸ்ணத்தில் சுய அரசியல் இலாபத்திற்காக குளிர்காயாதீர்கள்."

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .