2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சைவத்தொண்டர் நல்லதம்பி காலமானார்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மேற்குப் பகுதியில் பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து, சைவசமய வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி வந்த சைவத் தொண்டர் வீ.நல்லதம்பி  தனது 88ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். இவர் சுகவீனமடைந்திருந்த நிலையிலேயே காலமானார்.
கன்னன்குடாவைச் சேர்ந்த வீமாப்போடி நல்லதம்பி,  42 வருடங்களாக பிரசித்தி பெற்ற கன்னன்குடா கண்ணகியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவராக தொண்டாற்றினார்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் பூர்வீக வரலாறு, பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றியதுடன்,  தந்தாமலை முருகன் ஆலய வளர்ச்சிக்கும் இவர் பணியாற்றினார்.  சைவத்தொண்டரும்; சமூக சேவையாளருமான இவர் முன்னாள் வட்டவிதானை, ஈச்சந்தீவு கன்னன்குடா பலநோக்;கு கூட்டுறவுச் சங்க பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றினார். தற்போது இவர் மண்முனை மேற்குப் பிரதேச முதியோர் சங்கங்களின் சமாஜ தலைவரும் இறக்கத்து வெளிகண்ட கமநல அமைப்பு தலைவரும் ஆவார்.

இவரது பூதவுடல் இன்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு கன்னன்குடா பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .