2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மைலம்பாவெளியில் முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 14 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலம்பாவெளிப் பகுதியிலுள்ள வாவியிலிருந்து முதியவரொருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

விநாயகர்புரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரரான பொன்னையா அலையப்போடி (வயது 71) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
வாவியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் இம்முதியவரின் சடலத்தை அவரது பிள்ளைகள் அடையாளம் காட்டினர். 

மதுபோதையில் காணப்பட்ட இம்முதியவர், சுயநினைவற்ற நிலையில் வாவியில்; மூழ்கி மூச்சுத் திணறி மரணமடைந்திருக்கலாமென பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்புரவின் பணிப்பின் பேரில் சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .