2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சித்தி விநாயகர் வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.ரம்ஸான், எம்.சுக்ரி)

துறைநீலாவணை, சித்தி விநாயகர் வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

துறைநீலாவனையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐம்பது இலட்சம் ரூபா நிதியை  ஒதுக்கீடு செய்திருந்தார்.

பாடசாலையின் அபிவிருத்திச் சங்கச் செயலாளரும், ஆசிரியருமான சொ.தூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அ.செல்வேந்திரன், பட்டிருப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி, சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமுக சேவகருமான பொ.பேரின்பராசா உட்பட கிராமத்தின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .