2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

காத்தான்குடி நகர சபையின் மாடு அறுக்கும் மடுவம் மூடப்பட்டது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 14 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, காத்தான்குடி நகர சபையின் மாடு அறுக்கும் மடுவம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய  நேற்று புதன்கிழமையுடன் மூடப்பட்டது.
காத்தான்குடி நகர சபையின் மாடு அறுக்கும் மடுவம் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் சுகாதாரத்துக்கு கேடு விளைவிப்பதாக தெரிவித்து காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கதல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் நிதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம்  திகதியுடன் காத்தான்குடி நகர சபையின் மாடு அறுக்கும் மடுவத்தை  மூடுமாறு உத்தரவிட்டிருந்தார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து காத்தான்குடி நகர சபை மட்டக்களப்பு மேல் நீதிமன்;றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.சிவபாதசுந்தரம், காத்தான்குடி நகர சபையின் மாடு அறுக்கும் மடுவத்தை ஜுன் மாதம் 15ஆம் திகதியுடன் மூட வேண்டும் என காத்தான்குடி நகர சபைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு அமைய காத்தான்குடி நகர சபையினால் மாடு அறுக்கும் மடுவம் மூடப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .