2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

களுமுந்தன்வெளிக்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 14 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட களுமுந்தன்வெளி பிரதேசத்தில் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருந்த மின்விநியோகம் மீண்டும் வழக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனையின் முழு இலங்கைக்குமான ஒளியேற்றும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்துவைத்து பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. சுமார் இரண்டு கோடி 23 இலட்சம் ரூபா இந்த மின்விநியோகத் திட்டத்திற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டது.

களுமுந்தன்வெளிப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் இந்தப் பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மின்சாரத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்த வேண்கோளுக்கு அமைய இந்தப் பிரதேசத்திற்கான மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

களுமுந்தன்வெளி கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தெ.சௌந்தரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மின்விநியோகத்தை ஆரம்பித்துவைத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன், மின்சாரசபையின் பிரதேச அத்தியட்சர் அனுசாந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .