2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

இரத்த தானம் செய்தவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 15 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(லோஹித், எம்.சுக்ரி, ஜிப்ரான்)

உலக இரத்த நன்கொடையாளர் தினத்தையொட்டி இரத்த தானம் செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

நாவற்குடா சின்ன லூர்த்து ஆலயம், நாவற்குடா புனித மரியால் ஆலயம், சிவானந்த விளையாட்டுக்கழகம், சிவானந்தா இளைஞர் கழகம், சுகாதார நல கல்வி நிலையம் என்பன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

புனித லூர்துமாதா ஆலய பங்குத்தை அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்லடி, கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேகுமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகளான டாக்டர் திருமதி யாழினி, திருமதி தேவராஜா உட்பட ஆலயங்களின் பங்குத்தந்தைகள், முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்லடி தொடக்கம் ஆரையம்பதி வரையிலான பகுதிகளில் உள்ள இரத்த நன்கொடையாளர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எதிர்வரும் காலங்களில் இரத்த நன்கொடையாளர்களின் சேவைகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளுமுகமாகவே இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுவதாக அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .