2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு

A.P.Mathan   / 2012 ஜூன் 16 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற கிராமமான கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஈரலக்குளம் கிராமத்தில் வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

கரடியனாறு ஈரலக்குளம் வாசியான 72 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான அழகன் தருமலிங்கம் என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மனைவி குறித்த சடலத்தை அடையாளம் காட்டினார்.

தற்கொலை என சந்தேகிக்கப்படும் இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .