2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, சித்தாண்டி விநாயகர் கிராமத்திலுள்ள வில்லுத் தொட்ட கிராம வீதிக்கான புனரமைப்பு பணிகள் நேற்று சனிக்கிழமை முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கபட்டது.

கிராமிய வீதி அபிவிருத்தி விசேட திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் இவ் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுமார் 23 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி வேலைத் திட்டத்தில் வீதி மற்றும் மதகு என்பன அமைக்கப்படவுள்ளன.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.வினோத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி தவிசாளர் தம்பிராஜா உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலாநந்தபுரம் உள் வீதிக்கான செப்பனிடும் பணிகளும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .