2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்திற்கு அமைச்சர் சரத் அமுனுகமவின் குழுவினர் விஜயம்

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


மட்டக்களப்பு, பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்திற்கு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள்  இன்று காலை விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபடுகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இவர்கள் மக்களின் பல்வேறுபட்ட குறைபாடுகளை கேட்டறிந்துக் கொண்டனர்.

இக்குழுவினர் வாழைச்சேனை, பேத்தாழை, புதுக்குடியிருப்பு, கிண்ணையடி, சுங்காங்கேணி, கண்ணகிபுரம், குளக்கோட்டன் கிராமம் போன்ற கிராமங்களுக்கு சென்று மக்களை பார்வையிடும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக நிகழ்வை ஒழுங்குபடுத்தியுள்ள மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகளீர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸகரன் தெரிவித்தார்.

மேலும் ஏழு கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்கவுள்ளதாகவும், கிராமங்கில் நிலவும் பல்வேறுபட்ட  குறைபாடுகளை இவர்கள் கேட்டறியவுள்ளதாகவும் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸகரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று 50 பேர் அமைச்சர் சரத் அமுனுகம முன்னிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .