2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம் குப்ராமப் பெண்களுக்கு தையல் பயிற்சி

Menaka Mookandi   / 2012 ஜூன் 16 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இப்பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

இதன் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சி நெறியை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்களின் வாழ்வதார மேம்பாட்டுக்காக தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.  

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக  கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் இயக்குனர் அருட்பணி.கிறைட்டன் அவுட்ஸ்கோன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக  தேற்றாத்தீவு பங்குத்தந்தை அருட்பணி. பேதுரு ஜீவராஜ், காளிகோயில் பிரதம குருக்கள் சதாசிவம் ஐயா, ஓய்வு பெற்ற அதிபர் ஆறுமுகம் அவர்கள், கல்லாறுப் பங்குத்தந்தை அருட்பணி பு.அம்புறோஸ், யூதாஇல்ல மேலாளர் அருட்சகோதரி இமைக்லேற், ஆகியோருடன் பெற்றோர்கள், அருட்சகோதரிகள் மற்றும் கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது கண்காட்சியில் பயிலுனர்கள்  பெற்றுக் கொண்ட பயிற்சியின் மூலம் தயாரித்த தையல் உற்பத்திப்பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றினையும் அதிதிகள் பார்வையிட்டனர்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .