2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வவுணதீவு பொதுச்சந்தைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 18 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொதுச்சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கின் உதயம் பொருளாதார அமைச்சின் புறநெகும திட்டத்தின் கீழ் மாகாணங்களின் பிரதேசங்களுக்கு இடையிலான கிராமிய மற்றும் சிறுநகர அபிவிருத்தி என்னும் விசேட முன்னெடுப்பின் பிரகாரமும்; கிழக்கு மாகாண உள்ளூராட்சி சேவைகள் மேம்;படுத்தல் திட்டத்தின் அடிப்படையிலும் இந்த சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாட்டிவைத்தார்.

சுமார் 100 இலட்சம் ரூபா செலவில்;; நிர்மாணிக்கப்படவுள்ள இச்சந்தை தொகுதி கட்டிடத்திடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.  இதற்கான நிகழ்வில் பிரதேச சபையின் உபதவிசாளர் ஜெ.ஜெயராஜ், பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம சேவையாளர், பிரதேசத்தின் பொது அமைப்பக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .