2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலையின் திருமலை வளாக முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஜூன் 18 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் திருமலை வளாக முதல்வருக்கு எதிராக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அனைத்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கிழக்கு பல்கலைக்கழக பிரிவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கல்விசாரா ஊழியர்களின் சம்பள உயர்வு கோரி திருமலை வளாகத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது, குறித்த பகுதியில் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்துக்கு தடையேற்படுத்த முயன்றதாக கோரியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வரின் பெயர் பொறிக்கப்பட்ட கொடும்பாவியை கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முதல்வருக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .