2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மீனவர்களுக்கு எரிபொருள் மானியக் கூப்பன்கள்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 19 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு  எரிபொருள் மானிய கூப்பன்கள் நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்தில் மாவட்ட கடற்றொழில் பிரதிப்பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீனவர்களுக்கும் எரிபொருள் மானிய கூப்பன்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .