2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் கருவாடு தயாரிப்புக்கான பயிற்சிநெறி

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


தரமான மீன்கருவாடு மற்றும் மாசிக்கருவாடு தயாரித்தலுக்கான பயிற்சி நெறி இன்று புதன்கிழமை காலைமுதல் மட்டக்களப்பு கடல்தொழில் வளத்திணைக்கள மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் நிதி அனுசரணையில் இப் பயிற்சி நெறி நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.ஏ.சார்ள்ஸ் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி, கடல்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் தொமிங்கோ ஜோர்ச், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தேசிய இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டமத்திலுள்ள மீனவர் சங்கங்களில் இருந்து 25 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இப் பயிற்சி நெறி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்பயிற்சியின் நிறைவில், மீன்கருவாடு, மற்றுமு; மாசி தயாரிப்பதற்கான தொழில் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .