2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான நிதியுதவி வழங்கல்

Kogilavani   / 2012 ஜூன் 20 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, புதுமண்டபத்தடி பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் வாழ்வாதார நிதி வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜாவின் நிதியுதவியில், புது மண்டபத்தடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

கோழி வளர்ப்பு, அரிசி மா தயாரித்தல், முட்டை விற்பனை, மிளகாய் தூள்  தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுவதற்காக இப்பிரதேச பெண்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டது.

மாதர் அபிவிருத்தி சங்கத்தின் பொருலாளர் திருமதி தியாகராஜா நாகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜா, மாகாண சபை உறுப்பினரின் செயலாளரும் மக்கள் தொடர்பாளருமான கோல்ட்ன் பெஞ்சமின், மாதர் சங்க செயலாளர் செல்வி மயில்வாகணம் சசிகலா ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .