2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான பயிற்சி பட்டறை

Kogilavani   / 2012 ஜூன் 20 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்,  சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான பயிற்சிப்பட்டறை நேற்று செவ்வாக்கிழமை மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் நிதி அனுசரணையில் இப் பயிற்சி  நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி, ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த சர்வதேச வியாபார ஆலோசகர் லோறன்ஸ் நோர்வூட், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் டிலாந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் முழுநாள் பயிற்சிப் பட்டறையில், சிறிய நடுத்தர ஹோட்டல்களின் உரிமையாளர்கள், வள்ளங்களின் ஓட்டுனர்கள், சுற்றுலாத்துறை வழிகாட்டுனர்கள், கைப்பணி பொருள் உற்பத்தியாளர்கள், நெசவு ஆலைகளைச் சர்ந்தவர்களுமாக 43 பேர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நெறியில், சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விழக்கமளிக்கப்பட்டதுடன் நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .