2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கிண்ணயடி பஸ் விபத்தில் ஐவர் காயம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் கிண்ணயடிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து வந்த பஸ்சும் வீதி வேலையில் ஈடுபடுவதற்காக வேலையாட்களை ஏற்றிவந்த டிரக்டர் வண்டியும் மோதியதில் ஐந்து பேர் காயப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகவும் மற்றய இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .