2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பெரிய புல்லுமலையில் தற்காலிக சந்தை அமைப்பதற்கு ஏற்பாடு

Kogilavani   / 2012 ஜூன் 22 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, பதுளை வீதியிலுள்ள மிள்குடியேற்றக் கிராமமான பெரிய புல்லமலையில் 'சோவா' நிறுவனத்தினால் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள சந்தைக்கான காணியை வழங்குவதற்கு ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் வினோத் உறுதி வழங்கியுள்ளார்.

சோவா நிறுவன பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பெரிய புல்லுமலை மக்கள் இணைந்து நேற்று வியாழக்கிழமை பிரதேச சபைத் தவிசாளருடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த முடிவினை தவிசாளர் தெரிவித்தார்.

பெரிய புல்லுமலை பிரதேசத்தில் குடியேறிவரும் மக்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் சோவா நிறுவன பிரதிநிதிகள் அப்பிரதேசத்தில் தங்கியிருந்து அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் மீள்க் குடியேறியுள்ள மக்களின் சந்தை வசதிகளை மேம்படுத்தும் வகையில் சோவா நிறுவனம் இந்தத் தற்காலிக சந்தையை அமைக்கவுள்ளது.

இதுவரை 95 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர். காடுகள் வளர்ந்து மிக மோசமாக உள்ளதனால் இன்னமும் 500இற்;கும் அதிகமான குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மீளகுடியேற முடியாத நிலை காணப்படுகிறது.

அத்துடன் இருப்பிட வசதிகள் இன்மையாலும் மக்கள் குடியேறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இக் கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச சபையின் தவிசாளர் வினோத், அரசியலுக்கப்பால் தன்னாலான அனைத்து உதவிகளையும் மீளக்குடியேறும் பெரிய புல்லுமலை மக்களுக்காக செய்து தர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .