2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ஏறாவூர் பற்றில் மீளக்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் மீளக்குடியேற்றம்

Kogilavani   / 2012 ஜூன் 22 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேற்றப்படாமல் இருந்த மக்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஆவட்டியாவெளி, வித்தகமடு, நவின்தெனியமடு போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களே நேற்று முன்தினம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர்  தெரிவித்தார்.

17 குடும்பங்களைச் சேர்ந்த 76பேர் மீள்குடியேற்றம்  செய்யப்பட்டதாகவும் இத்துடன் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து பொதுமக்களது மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் நிறைவுபெற்றுள்ளதாக பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பிரதேச இராணுவ பொறுப்பதிகாரிகள், யு.என்.டி.பி அதிகாரிகள், சர்வோதய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளும் வழங்கபட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .