2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

படுவான்கரையில் த.தே.கூ இன் முதலாவது பிரசாரக் கூட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 24 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

கிழக்கு மாகாணசபை தேர்தலையொட்டி தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வி.ஆர்.மகேந்திரனின் படுவான்கரை பிரதேசத்துக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை கொக்கட்டிச்சோலையில் ஆரம்பமானது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளை அடுத்து, கொக்கட்டிச்சோலை தமிழரசுக் கட்சி கிளையின் உறுப்பினர்களை அறிவுறுத்தும் கூட்டமாக இது நடத்தப்பட்டது.

இதன்போது பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிஸ்தர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், பொன் செல்வராசா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .