2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சவூதியில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 25 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞரொருவர் சவூதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த பதுர்தீன் முகம்மது நிப்றாஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
இவ் இளைஞர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார்.

ஜித்தா நகரிலுள்ள ஹோட்டலொன்றில் பணியாற்றிவந்த இவர், அக்ஹோட்டலின் 5ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் கூறினர்.

சடலம் ஜித்தா நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .