2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கல்லடி இராமகிருஷ்ண மிஸன் ஆச்சிரமத்தில் படிப்பக கட்டிடம், சாரதா பாலர் பாடசாலை திறப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 25 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)


சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள இராமகிருஷ்ண மிஸன் ஆச்சிரமத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாணவர்களுக்கான படிப்பக கட்டிடம் மற்றும் சாரதா பாலர் பாடசாலை கட்டிடமும் இன்று காலை திறந்து வைக்கப்பட்டன.

இராமகிருஷ்ண மிஸன் இந்தியா, கல்கத்தா, வேலூர் ஆச்சிரமங்களின் த்தின் உப செயலாளர் சுவாமி ரவிந்திரானந்த ஜீ மகராஜ் இந்த கட்டிடங்களை வைபவரீதியாக திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸ், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கொழும்பு இராமகிருஷ்ணமிஸன் ஆச்சிரமத்தின் உபதலைவர் சுவாமி சர்வரூபானந்த ஜீ, மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஸன் பொறுப்பாளர் சுவாமி கபாலி சானந்தா ஜீ மகராஜ், மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திருமதி எஸ்.ஞானசௌந்தரி உட்பட முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .