2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

துவிச்சக்கர வண்டி மீது முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

Super User   / 2012 ஜூலை 26 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் மாவடி வேம்பு எனுமிடத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டி மீது  முச்சக்கர வண்டி மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயியே பலியானவராவர்.  மரணமானவர் புலிபாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான முருகன் கந்தசாமி என அவரது மனைவி பொன்னுத்துரை பாக்கியம் சடலத்தை அடையாளம் காட்டினார்.

தற்போது, சந்திவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை நாளை பிரேத பரிசோதனைக்காக செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் உத்தரவிட்டார்.

கல்முனையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏறாவூர் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .